பல்கலைக்கழகங்களை ஜனவரியில் மீள திறக்க தீர்மானம்!

புதிய கொரோனா வைரஸ் பிறழ்வால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அழைக்கப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சில பல்கலைக்கழக விடுதிகளில் 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள காரணத்தால், அவர்களை மீளவும் அழைத்தால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே கொரோனாத் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *