யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் பயணிகள் பேருந்தொன்று இன்று விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் இடையே சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருந்தும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வரணி பிரதேச வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

