
இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலத்தில் இடம் பெற்ற சிரமதானப் பணி!
இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலத்தில் கொரோனா பரவலை
தடுக்கும் முகமாகவும், மழை காலத்தில் ஏற்படும் டெங்கு பரவலை தடுப்பதற்காகவும் பாடசாலையின் அதிபர் AGM.ரிசாத் அவர்களின் தலைமையில் பாடசாலையின் வளாகம் முழுவதற்குமான மாபெரும் சிரமதான நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றது.இந்நிகழ்வை சிறப்பாக செய்து முடிப்பதற்காக அதிபரின் முயற்சியினால் சமுர்த்தி உத்தியோகத்தர் IL.அரூஸ்தீன் அவர்களின் பங்களிப்புடன் இஸ்லாமபாத் கிராமத்தில் வசிக்கின்ற சமூர்த்தி பயனாளிகள்,நலன் விரும்பிகளை கலந்து கொள்ளச்செய்தமை விஷேட அம்சமாகும்.மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட சமூர்த்தி பயனாளிகள்,பெற்றோர்,நலன் விரும்பிகள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் அதிபர் பாடசாலை
சார்பாக தனது
நன்றியை தெரிவித்ததோடு மற்றும் சிரமதானக் கழிவுகளை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாநகர சபை ஊழியர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.