வவுனியா பூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் 200வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இன்று (14.12.2022) காலை 9.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினர்கள் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினரினால் நினைவு கூரப்பட்டது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் சொற்பொழிவுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் , மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு புத்தாடைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் என்பன தமிழ் விருட்சம் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர் குமுதன் தயாரின் நினைவாக மரக்கன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply