அடிமைச் சேவகம் புரியும் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே- யாழில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!

வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஆளுநரே மோசடிகளுக்கு ஆதரவா? பேஸ்புக் செயலாளர் வடக்கு கல்வியில் எதற்கு?இவடக்கு கல்வியை திருடர்களின் கூடாரமாக்காதே!இஅடிமைச் சேவகம் புரியும் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே! போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் சற்றுமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply