மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றிருப்பதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வாரென தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார்.
இதேவேளை, மோசமான சுகயீனம் காரணமாகவே ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் நிராகரித்தன .
அவர் வழமையான மருத்துவ பரிசோதனைக்கே சென்றுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.