மானிப்பாய் – சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள், நேற்றிரவு பத்து மணியளவில் புகுந்த வாள்வெட்டு குழு அட்டகாசம் செய்துள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு, அங்கு சென்று வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளன.
அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கும் தீ மூட்டியுள்ள நிலையில், அதனை அவதானித்த வீட்டினர் முச்சக்கர வண்டி மூடியிருந்த பொலுத்தீனை உடனடியாக கீழே இழுத்து வீசியுள்ளனர்.
இதன் காரணமாக முச்சக்கர வண்டி பாரிய பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.