தைப்பூசத் திருநாளில் நடைபெறும், அன்பே சிவம் விருது வழங்கும் நிகழ்வில் தியானேஸ் மதுசனின் நேர்மையான செயலைப் பாராட்டி கௌரவிக்க சைவ மகா சபை தீர்மானத்துள்ளது.
தாலி அறுத்து ஓடும் இக்காலத்தில் தன் கையில் அகப்பட்ட பல இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள தாலி உட்பட நகைகளை தொலைத்தவரை கண்டுபிடித்து ஒப்படைத்த 20 வயது வேலை தேடும் இளைஞன் மதுசனின் செயல் போற்றிப் புகழ்ந்து பாராட்டத்தக்கது.
அண்மையில், பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது, யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் கைப்பையை தவறி கீழே விழுந்தியவரிடம், அந்தவழியாகச் சென்ற தியானேஸ் மதுசன் எனும் 22 வயது இளைஞன் அக்கைப்பையை ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு, கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்து, நேரில் சென்று ஒப்படைத்துள்ளார்.
அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும் இன்றைய உலகில் குறித்த இளைஞனின் செயலை பாராட்டி கௌரவிக்க சைவ மகா சபை தீர்மானத்துள்ளது.
மட்டக்களப்பில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்த கார்!