நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்படலாம்.
அடுத்த சில வாரங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படலாம்.
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான மாற்றுவழிகள் முன்னெடுக்கப்படும் என கூறிய அமைச்சர், ஒருபோதும் மக்களை பட்டினியில் வைக்கப்போவதில்லை என்றும் உறுதியளித்தார்.
உரக் கலன்கள் வெடிப்பு சம்பவத்தை பெரிதுபடுத்துவதில் நியாயமில்லை! மஹிந்தானந்த