சந்தனவெட்டை கிராமத்தில் குடி நீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சந்தனவெட்டை கிராம மக்கள் குடிநீர் வசதியில்லாமல் எதிர்நோக்கியுள்ள கஷ்டங்கங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கிராம மக்களை ஜனநாயக இடதுசாரிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட மகளிர் அமைப்பாளர் றயிஸா றியாஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

தமது சந்தனவெட்டை கிராமத்தில் 93 தமிழ் , முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருவதாகவும், தாங்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து 2010 ஆம் ஆண்டு மீள்குயேற்றம் செய்யப்பட்டாலும் இன்னும் தமக்கான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என மக்கள் தமது கோரிக்கையை மகளிர் அமைப்பாளரிடம் முன்வைத்தனர்.

நாளாந்த குடிநீர் தேவையின் போதும், அத்தியவசிய தேவைகளுக்காகவும் குடிநீரைப் பெறுவதில் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு குடிநீரை பெறுவதற்கு சுமார் 04 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள அம்மன் நகர், அறபா நகர் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

இது விடயத்தில் தமது கட்சியின் தலைவரும்,நீர் வழங்கள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார அவர்களிடம் பேசி, குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்துதர தான் நடவடிக்கை மேற்கொள்வதாகறயிஸா றியாஸ் மக்களிடம் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *