தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை தொடர்பில் கைதாகிய பெண்பூசாரி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி தங்கசங்கிலி உட்பட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை களவாடியுள்ளதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த தங்கநகைகளை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகிக்கப்பட்ட பெண் சந்தேக நபரையும் அவரது கணவரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் , களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் ஈடு செய்யப்பட்டிருந்ததுடன் ஏனைய நகைகள் தங்க நகைகடைகளில் விற்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!