மானிப்பாய் – உரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
20 வயதுடைய இந்திரன் சஞ்சீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
இன்று காலை குறித்த இளைஞனின் வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும்! சுரேஸ்