வாழைப்பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தாயால் வழங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்று சிக்கிக் கொண்ட குழந்தை கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மெதகெட்டுவ பகுதியை சேர்ந்த 11 மாதங்களேயானா, நிம்சரா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலதிக விசாரணைகளுக்காக குழந்தையின் சடலம் காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.