வெள்ளிக்கிழமைகளில் சிவபுராணம் பாடும் பழக்கத்தை பொண்டு வந்தவர் நாவலர் பெருமான்.சிவபுராணத்தை எல்லாப்பிள்ளைகளும் பாடுவர்கள்.ஒரு அடி சொன்னால் அடுத்த அடி சொல்வார்கள்.அந்த அடிக்குள் யார் நிற்கின்றார் என்றால் ஆறுமுகநாவலர்.நாவலர் பெருமான் எங்களுடைய சமூதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கோயில்களை ஏற்படுத்தி, சமயத்தை ஒழுங்குபடுத்தி சிவநெறியை ஒழுங்கபடுத்திஇகுரல் கொடுத்து எங்களுக்காக அர்பணித்து இந்த பாரிய பணிகள் எல்லாம் செய்து வைத்தாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.
அதன் அறுவடையை தான் நாங்கள் இப்போ,அனுபவிக்கின்றோம். இன்றைக்கு சைவ பாடசாலைகள் எல்லாம் நல்ல உயர்வு.யாழ்ப்பாணத்திலே யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பெறுபேறு தான் யாழ்ப்பாணத்தின் பெறுபேறாக அடையாளப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண இந்துக்கல்லூரி பாடசாலை உருவாக வேண்டும் என்று கடைசிக்காலத்தில் கவலைப்பட்டார்.ஏன் என்றால் ஆங்கில மொழியில் படித்தால் தான் வேலை வாய்ப்பு, ஒரு கல்லூரி என்ற உயர்நிலையில் விளையாட்டு மைதானம் எல்லா இருந்தால் தான் மாணவர்களுக்கு ஒரு உயிர்ப்பு. அதை என்னால் செய்ய முடியவில்லை என்று அழுதார்.
நாவலருடைய இறுதி வைபத்தில் வந்தவர்கள் பேசினார்கள் நாவலருக்கு செய்ய வேண்டிய கைமாறுகளில் உரு கல்லூரியை உருவாக்க வேண்டும்.அது தான் இன்று யாழ்ப்பாண இந்துக்கல்லூரி.குறித்த பாடசாலையை 1890 களில் நாவலர் இறந்து 20ஆண்டுகள் பின்பு தான் ஆரம்பித்தார்கள் என்று அவர் கூறினார்.
அந்த பாடசாலை பார்த்து தான் சேர்.பொன் இராமநாதன் இராமநாதன் என்னும் பாடசாலையை உருவாக்கினார்.நாவலின் சொல்லுக்கு அமைய நாங்கள்அம்பனில் ஒரு பாடசாலை தொடங்கிய போது பிரித்தானியா அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை.தெல்லிப்பளை பிரகாசத்தின் லைசன்ஸை வைத்து தான் தெல்லிப்பளை மகா ஜன கல்லூரி 10 ஆண்டுகளின் பின்பு குறித்த பாடசாலையின் முதல் பரீட்சை மாணவர்கள் தெல்லிப்பளை சைவப்பிரகாசத்தின் அடையாளமாக வரலாறு எழுதி வைத்துள்ளார்கள்.
அம்பல நாவலர் தான் நாவலர் பெருமானின் இறுதிச்சடங்கில் இந்த வளவில் இருந்து கோம்பயமணல் மட்டும் அங்கப்பிரதிஷ்டை செய்தார்.அதன் பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கபிரதிஷ்டை செய்து கோம்பயமணலுக்கு சென்றார்கள் என்று பதிவு செய்து இருக்கின்றார்கள்.
கோப்பாயிலே, நாவலர் பாடசாலையை தொடங்கினார்.சமீபத்தில் இணுவிலே சைவபிரகாச வித்தியா என்ற 3 வது பாடசாலை உருவாக்கப்பட்டது.நாடு முழுவதும் சைவ பிரகாசக்கள் நாவலருடைய அந்த ஒழுங்கை அவர் செய்தார்.இன்றைக்கு நாங்கள் அந்த பெருமகன் கட்டி காத்த பாரம்பியங்களை பேணுவோம் என்றால் இன்றைக்கு நவீனத்துவம் சைவப்பாடசாலைகளில் காலையிலே யாரோ பாடிய தேவாரத்தை பெரிய சத்தத்தில் பதிவு செய்து வைத்திருக்கின்றார்கள்.
நாவலர், கண்ணீர் வலிந்தார்.இவ்வளவு நாள் கஷ்பட்டு உருவாக்கிய காலையிலே பத்து நிமிடங்கள் எல்லோரும் சேர்ந்து தேவாரம் பாட தெரியாதவர்கள் என்ற சமூதாயமாக மாற்றப்பட்டுள்ளது.இன்றைக்கு பாடசாலையில் அதிபர்களாக இருப்பவர்கள் எப்படி பாடசாலைகள் தொடங்கியது என்பதை படிப்பதில்லை.உணர்வில்லை. என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக திறப்பு விழாவில் பல அரசியல் தலைவர்கள் வரவில்லை.யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவனாக கொடி பிடிக்க அழைத்தார்கள்.விழா நடந்தது.தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் உரையாற்றினார்கள்.
நாவலர், இல்லை என்றால் இந்து நாகரிகமும் இல்லைஇஇந்து தத்துவமும் இல்லை.நான் இன்று 200வது ஆண்டு நிறைவு விழாவில் நான் கூறுகின்றேன் , ஈழத்துடன் சொத்தாக இருக்கின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே நந்தி கொடிஇஆலவட்டம் பிடிக்காமல் விழா நடாந்தால் அது சைவத்துக்கும் நாவலருக்கு,இராமநாதனுக்கு செய்கின்ற துரோகம் என்று அவர் கூறினார்.
நாவலருக்கு செய்கின்ற கைமாறாக 200 ஆவது ஆண்டிலே விட்ட பிழைகளையும்,அறியாமல் விட்ட தவறுகளை திருத்தி ஆளுநர் என்ற சைவபாரம்பரியத்தை இந்த மண்ணிலே நிலை நிறுத்தி தமிழர்கள் இடையேய உயர்ந்த எண்ணங்களை உருவாக்கி காப்பாற்ற வேண்டும்.
கடைசியாக சொல்கின்றேன் சைவ மக்களின் கல்யாண வீட்டு உடை நடையே நாவலருக்கு அல்லது சைவத்துக்கு செய்கின்ற துரோகம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





