ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

இன்று புதன்கிழமை (14) பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில், ஆளுநர் செயலக நுழைவாயிலை வழிமறித்து குறித்த போராட்டம் இடம்பெற்றது.

வடக்கு ஆளுநரே வழங்கிய வாக்குறுதி எங்கே?, நிறுத்து மோசடிகளை நிறுத்து, கையூட்டல், ஆளுநரே மோசடிக்கு ஆதரவா போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் போது அங்கு வந்த ஆளுநர் அலுவலக அதிகாரிகள் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் பொ.வாகீசன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *