ஆசிரியர் – அதிபர் சங்கங்களின் போராட்டம்: கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 44 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த 44 பேரையும் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு நேற்றைய தினம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply