போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட ஒப்புதல்!

போக்சோ சட்டத்தின் கீழ் செயல்படும் 389 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிர்பயா நிதிமத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நாடு முழுவதும் 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் 389 நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்கக் கூடியவை. இந்த போக்சோ நீதிமன்றங்கள் 2023 ஆண்டு மார்ச் வரை செயல்பட 1572 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 971 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply