மலையகத்தில் தொடரும் குழந்தை கொலைகள்!!

வலப்பனை மத்துரட்ட போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள, மாரதுவெல என்ற இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சு ஊட்டியதுடன் தானும் நஞ்சுருந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் இம்மாதம் 12-ம் திகதி இடம்பெற்றுள்ளதாக மதுரட்ட போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் உடனடியாக தாய் மற்றும் பிள்ளைகள் மூவரையும் காப்பாற்றியதுடன், 119 அவசர போலீஸ்சாருக்கும் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசா சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, குறித்த தாயை சிகிச்சையின் பின் கைது செய்துள்ளனர்.

தனது கணவர், தன்னையும் பிள்ளைகளையும் கவனிப்பதில்லை, உண்ணுவதற்கு உணவு பொருட்கள் பெற்று தருவதில்லை, பிள்ளைகள் பாடசாலை அனுப்ப உபகரணங்கள் பெற்று தருவதில்லை, இதனால் தொடர்ந்து பட்டினி சாவை எதிர் கொள்கின்றோம்.

இதனாலேயே நஞ்சரிந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாக அவ்விழந்தாய் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

6 , 5 மற்றும் ஒரு வயது குழந்தைகளுக்கே குறித்த தாய் நன்சூட்டி உள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் போலீசார், தாய் மற்றும் பிள்ளைகளை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *