ஹாலிஎல மக்கள் தொடர் பட்டினியில்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது அனைத்து மக்களையும் வாட்டி வதைக்க கூடிய ஒன்றாக காணப்படுகின்றது.

மறுபுறத்தில் பொருட்களின் விலை ஏற்றம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.

குறிப்பாக எரிபொருள் வெளியேற்றத்தின் பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் பஸ் கட்டணம் அதி உச்சத்தை எட்டியுள்ளது.

சில சமயங்களில் எரிபொருள் விலையை குறைத்தாலும், பஸ் கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை என பண்டாரவளை ஹாலி எல மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உயர்தர வகுப்புகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் தங்களுக்கு இன்னும் கல்லூரி நுழைவுக்கான எந்த ஒரு பதிலும் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் அவர்களுடைய கிராமங்களுக்கு அண்மையில் காணப்படும் நகரங்களில் கடைகளில் பணிபுரிவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு 15 ஆயிரம் , 20 ஆயிரம் வரையான மாத சம்பளமே கிடைக்க பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய குடும்ப சூழ்நிலையானது மிக கடினமாக இருக்கும் நிலையில் போக்குவரத்துக்காகவே முக்கால்வாசி சம்பளத்தை தீர்த்து விடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத இறுதியில் குறைந்தது பத்து நாட்களாவது தங்கள் வீட்டில் பட்டினியில் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply