மோசமான காலநிலையால் இலங்கை வருடாந்தம் இழக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள்!

மோசமான காலநிலை காரணமாக இலங்கைக்கு வருடாந்தம் பில்லியன் கணக்கான டொலர்கள் நஷ்டம் ஏற்படுவதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் காலநிலை சுபீட்ச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு நட்டத்தை ஈடுகட்ட பல கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனவும் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை நிதி திட்டத்தின் ஆரம்ப செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவன் விஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை 75% ஆக அதிகரிப்பதற்காக, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட இயற்கை சக்திகளின் பயன்பாடு, சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *