கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்குமாறு அறிவிப்பு!

கொரோனா திகதிவாரியான விபரங்களுடன் தவறவிட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கை மறைக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “கொரோனா இறப்புகள் பதிவு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது. உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட அளவிலான, திகதிவாரியான விபரங்களுடன் தவறவிடப்பட்ட இறப்புகளை தெரிவிக்கவும், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன.

மேலும் சட்ட அடிப்படையிலான அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் பதிவு செய்யப்படுவதை சிவில் பதிவு அமைப்பு உறுதி செய்கிறது. எனவே கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமல் போகலாம். இறப்பை பொறுத்தமட்டில் முற்றிலும் பதிவு தவறுவதற்கான வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply