கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் மருத்துவமனைகளில் நோயாளர்கள் படுக்க இடமில்லாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலையை காண்பிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
குறித்த புகைப்படங்களில் நோயாளிகள் மருத்துவமனையின் நடைபாதையில் பாய்களில் தூங்குவதை காணக்கூடியதாக உள்ளது.
தினசரி அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனை திறன் இல்லாமல் போகிறது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறித்த சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கையின் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐசியு) தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு இரத்தினபுரி போதனா மருத்துவமனை உள்ளிட்ட நாட்டில் இரு மருத்துவமனைகளில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.