நாட்டில் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!

Forbes & Walker தேயிலை தரகர்களின் கூற்றுப்படி, நவம்பர் மாதத்தில் தேயிலை ஏற்றுமதி 25% ஆக குறைந்துள்ளதுடன், 19.28 மெட்ரிக் தொன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

FOB மதிப்பு, 2022 ஒக்டோபரில் அதிகபட்சமான ரூ.2,077.46 இல் இருந்த நிலையில், நவம்பர் 2022 இல் ரூ.1,992.05 என சிறிதளவு குறைந்துள்ளது.

இருப்பினும், FOB மதிப்பு ரூ.1,074.09 அதிகரித்துள்ளது,

ஜனவரி-நவம்பர் 2022 காலகட்டத்தின் ஒட்டுமொத்த பகுப்பாய்வின்படி, ஏற்றுமதிகள் மொத்தமாக 230.89 மெட்ரிக் தொன் கிலோகிராம்களாகும். அதாவது ஆண்டுக்கு 11% குறைந்துள்ளது. முதல் 11 மாதங்களில் FOB மதிப்பு ரூ.691.06 அதிகரித்து, 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மதிப்பை ரூ.1,611,72 ஆகக் கொண்டு வந்தது.

முதல் 11 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி 4.6 சதவீதம் குறைந்து 1.17 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

சிலோன் தேயிலையின் முதன்மையான இறக்குமதியாளராக ஈராக் உள்ளது.அதைத் தொடர்ந்து ரஷ்யா. துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளும் 11 மாத காலப்பகுதியில் சிலோன் தேயிலை இறக்குமதியில் முன்னணியில் இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *