இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ நேற்று (14) விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, இந்திய கடற்படை தளபதிக்கு இலங்கை விமானப்படையினரின் வர்ண அணிவகுப்பு படை பிரிவினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டது
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சி மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடளும் நடைபெற்றது.
இறுதியாக இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன
மேலும், இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படையின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்





