இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய ஒரு கோடி ரூபாய் – அதிர்ச்சியில் சுங்கப் பிரிவினர்
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான 650 கிராம் மெத்தம்படமைன் போதைப்பொருள் இலங்கையில் சிக்கியுள்ளது.
மெக்சிகோ மாநிலத்தில் இருந்து இலங்கையின் மாத்தறை பகுதியில், போலி முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்த குறித்த போதைப்பொருளை ,சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று கைப்பற்றியது.
குறித்த விமானதில் இருந்து கொண்டு வரப்பட்ட , தபால் பொதி தொடர்பில் சந்தேகம் அடைந்த சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அதனை பெற்றுக்கொள்ள வந்த நபர் முன்னிலையில் திறந்து பார்த்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோவில் இருந்து நாட்டுக்கு விமானம் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
இந்த மருந்து மெத்தம்படமைன் என இரசாயனப் பெயரில் அறியப்பட்டாலும், இலங்கைப் பாவனையில் ஐஸ் என்றே அறியப்படுகிறது.
இந்த போதைப்பொருள் கையிருப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விமான அஞ்சல் பார்சலை பெற்றுக் கொள்ள வந்த நபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.





