மீண்டும் பயணத்தடை: நாளை தெரியும்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் டெல்டா திரிபு வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் வார இறுதியில் பயணத்தடை அல்லது குறுகியகால முடக்கம் ஒன்றை அமுல்படுத்துவது தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகின்றது.

இது குறித்து நாளை (06) வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு கிடைக்கப்பெறும் ஆலோசனைகள், தகவல்களை அடிப்படையாக கொண்டு புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க அரசு உத்தேசித்துள்ளது.முதற்கட்டமாக, திருமண நிகழ்வுகள், வைபவங்கள் மற்றும் கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளதால் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசு விரைவு முடிவுகளை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply