
இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை இதுவரை வெற்றியளிக்கவில்லை. 1951 ஆம் ஆண்டின் பின்னர் இச் சட்டத்தில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக, சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.





