இலங்கை மாணவர்கள் இனி இலகுவாக ஆங்கிலம் படிக்கலாம் – வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நூலகத்தின் இணையத்தளமான “மகிழ்வாக ஆங்கிலம் ” என்ற இணையப் பக்கம் இப்போது இயங்குகிறது.

பாடல்கள் மற்றும் கதைகளின் ஒலி நாடாக்களைப் பயன்படுத்தி முன்பள்ளிச் சிறார்களை மிகவும் எளிமையான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மதுபாஷினி திஸாநாயக்க ரத்நாயக்கவினால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தப் பாடத்திட்டம் ஏற்கனவே வட பிராந்தியத்திலுள்ள 30 முன்பள்ளிகளில் சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்த ப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 12 முன்பள்ளிகளில் இன்னும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

https://lib.sjp.ac.lk/englishforfun/ என்ற முகவரி மூலம்   ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நூலகர் கலாநிதி நயனா விஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுப்பதன் மூலம் முழு பாடத்திட்டத்தையும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *