கல்முனை பிரதேச செயலக கலாசார இலக்கிய விழா!

கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு கல்முனை பிரதேச செயலகம், பிரதேச கலாசார அதிகார சபை என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட்ட கலாசார இலக்கிய விழா நேற்று (14) மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரதேச கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், பிரதேச மட்ட இலக்கியப் போட்டித் தொடர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கலாசார போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியவர்களுக்கும் இதன் போதும் விசேட பரிசில்களில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம் ரின்சான், அதிகார சபையின் செயற்பாட்டு தலைவர் ஏ.எம். பறக்கத்துல்லா, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் எம்.எம்.மன்சூர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், கலாசார அபிவிருத்தி  உத்தியோகத்தர்   திருமதி. ஹிபானா ஜிப்ரி உட்பட பிரதேச கலைஞர்கள், எழுத்தாளர்கள், கலை மன்றங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச தனவந்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *