இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பாவனை பாரியளவு அதிகரிப்பு! 1,000க்கும் மேற்பட்டோர் கைது

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

5 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply