யாழ் பல்கலையில் கடல் அட்டைப்பண்ணை தொடர்பான கருத்தரங்கு

வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் புவியியல்துறை தலைவரும் பேராசிரியருமான கலாநிதி அன்ரனிராஜன் தலைமையில் இடம்பெற்றது

இதன்  போது  கடலட்டை பண்ணை தொடர்பான சாதக பாதக நிலைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு புவியியல் துறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது வளவாளர்களாக   யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா ,பல்கலைக்கழ விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply