மஸ்கெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனி வேல் என்பவர் இன்று மதியம் 1. 30 மணியளவில் தனது இல்லத்தில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மசிறீ சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு இறந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வை இட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மசிறீ விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply