துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகள் தடுத்து நிறுத்தம்!

துருக்கி நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 300 ஆப்கான் அகதிகளை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக வீடுகளை இழந்த இலட்சக்கணக்கானோர் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரான் எல்லை வழியாகத் துருக்கி வந்தடைந்த சரக்கு லொரியை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது சிறுவர்கள், பெண்கள் என 300இற்கும் மேற்பட்டோர் பதுங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

ஆப்கான் அகதிகளைக் கையாளத் துருக்கி அரசு தெளிவான நெறிமுறைகளை இன்னும் வகுக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply