
படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது.
அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.
இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்துள்ளார். சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.