இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கித்துல்கல பிரதேசத்திற்கு வரவழைப்பது தொடர்பிலும் அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை பிரதேசத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சர் நேற்று கித்துல்கல பிரதேசத்திற்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அமைச்சர் கித்துல்கல பிரதேசத்தை அண்மித்த களனி கங்கையில் படகு சவாரி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன்,
இது தொடர்பில் முறையான திட்டமிடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை வழங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதேசத்தை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதற்காக தனது முழு முயற்சியும் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.





