இலங்கையில் சுருங்கியது மொத்த உள்நாட்டு உற்பத்தி!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போதைய விலைகள் மற்றும் நிலையான விலைகளில் உற்பத்தி அணுகுமுறையின் கீழ் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான பொருளாதார குறிகாட்டிகளை மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய விலையில் 2022 மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6,417,031 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்பு 45.2 சதவீதமாக உள்ளதுடன் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விவசாய, தொழில்துறை மற்றும் சேவைப் பொருளாதார நடவடிக்கைகள் முறையே 8.7 வீதம், 21.2 வீதம் மற்றும் 2.6 வீதமாகச் சுருக்கங்களைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply