ரணில் அரசில் அமைச்சுப் பொறுப்பை ஏற்க மாட்டேன்! நாமல் அதிரடி அறிவிப்பு

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே நான் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் ஏற்கக் கூடாது என முடிவு எடுத்துவிட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.  

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதன்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் கோட்டாய ராஜபக்சவின் அமைச்சரவையில் இருந்து விலகினேன்.  ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது நான் அமைச்சரவைக்கு வருவதில்லை என்று கூறினேன் என  குறிப்பிட்டார். 

மேலும் இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த நாமல்,

வாழ்நாளில் பிரிய மாட்டோம் என்று கூறியவர்களே இன்று பிரிந்துள்ளனர். இதுவே அரசியல். நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும்.  நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஜனாதிபதி கடும் முயற்சி செய்கின்றார். 

அரசியல் ரீதியாக எவ்வாறு செயற்படுவது என்பதை நாம் எதிர்காலத்தில் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *