பிரான்ஸிலிருந்து வரும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை!

பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து திரும்பும் முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

பயணத்திற்கான போக்குவரத்து ஒளி அமைப்பில் பரவலான மாற்றங்களின் கீழ், பிரான்ஸ் செம்மஞ்சள் பிளஸ் பட்டியலிருந்து செம்மஞ்சளுக்கு மாற்றப்படுகிறது.

கொவிட்-19 பீட்டா மாறுபாடு பற்றிய கவலையின் மத்தியில் இது கடந்த மாதம் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அத்துடன், ஜேர்மனி, ஒஸ்திரியா மற்றும் நோர்வே ஆகிய ஏழு நாடுகள் பசுமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. முன் ஊகம் இருந்தபோதிலும், ஸ்பெயின் செம்மஞ்சள் பட்டியலில் இருக்கும்.

எவ்வாறாயினும், மலிவான் சோதனைகளுக்கு பதிலாக ஸ்பெயின் மற்றும் அதன் அனைத்து தீவுகளிலிருந்தும் வருகை தருபவர்கள், பி.சி.ஆர். சோதனையை முடிந்தவரை புறப்படும் முன் சோதனையாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply