ரணில், கோட்டா தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான மக்களின் கருத்துக்கள் மிகவும் எதிர்மறையானவை என IHP என அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் மக்களின் வெறுப்புகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நவம்பர் மாதம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான மக்களின் அபிப்பிராயத்தின் பாதகமான நிலை 46 சதவீதமாக ஆகக் காணப்படுகிறது.

அனுரகுமார திசாநாயக்க மீதான எதிர்மறையான கருத்து 55 சதவீதமாகவும் சஜித் பிரேமதாச மீதான எதிர்மறையான கருத்து 55 சதவீதமாக மற்றும் கோட்டாபாய ராஜபக்ச மீதான எதிர்மறையான கருத்து 51 சதவீதத்துடன் ஒப்பிடும் போது இது ஒரு நல்ல நிலைமையாகும்.

மேலும், கோட்டாபாய ராஜபக்ச தொடர்பான உயர் எதிர்மறையான நிலைமை 80 சதவீதத்தில் இருந்து, தற்போது 51 சதவீதமாக மாறியுள்ளது.

Leave a Reply