இலங்கையில் 568 பேருக்கு எயிட்ஸ்- பகிரங்கப்படுத்திய முக்கியஸ்தர்!

இந்த ஆண்டு இதுவரை HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 

நவம்பர் மாதத்தில் மாத்திரம் 90 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும்  வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

HIV சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

HIV சுய பரிசோதனை கருவிகள் நாடு முழுவதிலும் உள்ள STD சிகிச்சை மையங்களில் கிடைக்கின்றன, சிகிச்சை மையங்களுக்கு செல்ல விரும்பாதவர்கள் https://know4sure.lk/ இணையத்தளத்தின் ஊடாக பதிவுசெய்து HIV பரிசோதனை கருவியை வீட்டிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

Leave a Reply