திடீரென கைவிரித்த ரணில்: வடக்கு கிழக்கில் இப்படி ஒரு நிலையா???

வடகிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந் நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட வீதி புனரமைப்புப்பணிகள் சிலவற்றை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சில வீதிகள் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாத்திரம் சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள உடன்படிக்கை பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மீள வழங்க உடன்பாடு காலத்தை பொறுத்துத் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிய வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *