யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து அடித்த மர்மகும்பல்

யாழில் வீதியால் சென்றவரை கட்டிவைத்து தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை வீதியால் சென்றவரை மூவர் வழிமறித்து, எங்கே செல்கிறார் என விசாரித்து விட்டு, வீதியில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.காயமடைந்தவரை பிரதேச இளைஞர்கள் மீட்டு தெல்லிப்பளை தார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.

Leave a Reply