இலங்கையில் அதிர்ச்சி – 18 பல்கலைக்கழக மாணவர்கள் வெளியேற்றம்

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடிபன பிரதேசத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றின் 18 மாணவர்கள் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் விஜேசிங்க நேற்று  ஹோமாகம ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

இவ்வாறே கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளதாகவும் அதன் காரணமாக அப்பகுதியில் போதைப்பொருள் சோதனைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் ஹோமாகம பிடிபன மஹேன பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்தை நிறுவுவதற்கும், ஹோமாகம பொலிஸ் பிரிவாக பொலிஸ் பிரிவை நிறுவி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை துரிதப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply