யாழில் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்கள்!

சுற்றாடல் நேயமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கி சுற்றாடல் முகாமைத்துவத்தில் முன்னோடிகளாக மாற்றுகின்ற முயற்சியாகக் கல்வி அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் ஒருங்கிணைந்து சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை நாடுபூராகவும் உள்ள பாடசாலை முறைமைக்குள் அமுலாக்கி வருகின்றது. 

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் சுற்றாடல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு ஜனாதிபதி பதக்கத்தினைப் பெற்றுக் கொள்வர். இப் பதக்கம் ஜனாதிபதி அவர்களால் நேரடியாக வழங்கப்படுகின்ற உயரிய பதக்கமாகும்.
இதற்கமைவாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் 2022.10.31 மற்றும் 2022.11.01 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட ஜனாதிபதி பதக்க பரீட்சிப்பில் பின்வரும் மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். 
1. செல்வி. திவானி திருவரங்கன் – யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரி
2. செல்வி. டினிசியா வசந்தகுமாரன் – யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரி
3. செல்வி. மீனலோஜினி இராஜமோகன் – யாழ் அத்தியார் இந்துக் கல்லூரி
4. செல்வன். செல்வராசா ~கேருஜன் – யாழ் அத்தியார் இந்துக் கல்லூரி
5. செல்வி. திருத்தகி ஜெயரட்ணம் – யாழ் அத்தியார் இந்துக் கல்லூரி
6. செல்வி. குகப்பிரியா ரவீந்திரன் – யாழ் வேம்படி மகளிர் கல்லூரி
7. செல்வி. கிருத்திகா மகேந்திரன் – யாழ் பெரியபுலம் மகாவித்தியாலயம்
8. செல்வி. பானுஜா மந்திரமூர்த்தி – யாழ் இந்து மகளிர் கல்லூரி

Leave a Reply