இலங்கையில் முட்டையின் விலை இது தான் – முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

அடுத்த வருடம் முட்டையின் விலை வீழ்ச்சி அடையும்  என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் 55 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக முட்டை உற்பத்தியாளர்கள்  வெள்ளை முட்டை 49 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 50 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்கள்.

 பேக்கரி விடுமுறை மற்றும் பாடசாலைகள் மூடல் போன்ற காரணங்களால் முட்டைக்கான தேவை குறைவடைந்துள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் உற்பத்தித் திறன் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பதாலும் 55 ரூபா  என்ற முட்டையின் விலை  வேகமாக வீழ்ச்சியடையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *