இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த வயல் காணியை சீரமைக்க முற்பட்ட காணி உரிமையாளர், எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்திற்கு உரியவர் போர் காலத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *