தீவிரமாக்கப்படும் உணவு பாதுகாப்பு சட்டம் – சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் விதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தினை தீவிரமாக அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை தீவிரமாக அமுல் படுத்தும் பணியில் சுகாதார வைத்திய அதிகாரிகளும் பொது சுகாதார பரிசோதகர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய மாவட்டத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளின் செயல்பாடுகளையும் உணவு விநியோக நடவடிக்கைகளையும் பரிசோதனை செய்யும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார விதிமுறைகளை மீறித் தயார் செய்யப்பட்டிருந்த, உணவு வகைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏறாவூர், செங்கலடி பிரதேசங்களில் 121 சிற்றுண்டிசாலைகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 21 சிற்றுண்டிச்சாலைகளில் உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை எனவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply