யாழில் மடிக்கணினி திருடன்..! மக்களே எச்சரிக்கை

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மடிக்கணினி களவாடப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த களவுச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்தவகையில் பொலிஸார், (15) மாதகல் தாயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரை மடிக்கணினியுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply