கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம் பணத்தை சுரண்டும் நபர்கள்! மக்களுக்கு கடும் எச்சரிக்கை

ருத்துவ சிகிச்சை,அவசர வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக உடனடியாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு,குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருவோரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை சுரண்டும் மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவசரமாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரும் நபர்களுக்கு இரகசியமான முறைகள் மூலம் விண்ணப்பபடிவங்களை விற்று ஆயிரக்கணக்கில் பணத்தை சுரண்டும் திட்டமிட்டு செயற்படும் இவர்களை பிடித்து குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் இவ்வாறு பிடிப்பட்ட சிலர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பபடிவங்களுக்கு பணத்தை கோரும் நபர்கள் தொடர்பில் அச்சமின்றி வந்து தன்னிடம் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எவ்வித சிரமங்களும் இன்றி உடனடியாக கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியுடன் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா என்பதை அறிய இரகசியமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவசரமாக வெளிநாடு செல்ல கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரும் நபர்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொள்ளும் சில மோசடியாளர்கள், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் மாயமாகி விடுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply