காரைதீவில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்த தோடம்பழம்!

அம்பாறை  மாவட்ட காரைதீவு பிரதேச சபை  சுயேட்சை குழு (தோடம்பழ உறுப்பினர்) ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இன்று (17) இணைந்து கொண்டார்.

இவர் முன்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும், ஐக்கிய சமூக சேவை நலன்புரி ஒன்றியத்தின் தலைவரும், மாளிகைக்காடு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவருமாக செயற்பட்டு வருபவராவார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கட்சி தலைவர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
இதன் போது கல்முனை மாநகர பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கி ணைப்பாளருமான ரஹ்மத் மன்சூர், காரைதீவு பிரதேச பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் எஸ்.எம்.இஸ்மாயில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார  அமைப்பாளர் எம்.எச்.நாஸர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் அம்பாரை மாவட்ட குழுச் செயலாளர் ஏ.சி.சமால்டீன் உட்பட பஸ்மீர் அவர்களின் இணைப்பு செயலாளர் எம்.எம்.றெஜிமீர் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply